மைக்ரோ காங்கிரீட் என்றால் என்ன

       


சிமெண்ட் மற்றும் உயர்தர கிரேடட் மணல், ஜல்லி மேலும் பாலிமர் உள்ளடக்கிய சுருக்க விரிசலைத் தவிர்க்கும் அட்மிக்சரையும் டிஸ்பென்சிங் ஏஜெண்டுகளையும் உள்ளடக்கி பைபர் நிலையில் இருக்கும் கலவை.


இது மைக்ரோ கிரீட் என்ற பெயருடன் அல்ட்ராடெக்கினுடைய பில்டிங் பிரொடெக்ட் ஆக மார்க்கெட்டில் கிடைக்கிறது. இதை சரியான அளவு சுத்த தண்ணீருடன் கலந்தால் ரிப்பேர் செய்ய ஏதுவான இளகிய தன்மை கொல்லூறால் சாந்தாக இடுவதற்கும் அல்லது இடுக்கான இடங்களில் ஊற்ற வல்லதாகவும் அமைகிறது. இதை ரிப்பேர் சாந்தாகவோ அல்லது பம்ப் செய்யக்கூடிய, ஊற்றக்கூடிய காங்கிரீட்டாகவோ உபயோகப்படுத்த இயலும்.


மைக்ரோ காங்கிரீட் என்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காங்கிரீட் கலவை. இது பழுதடைந்த காங்கிரீட்டை ரிப்பேர் செய்ய உகந்தது. சாதாரண காங்கிரீட் குறுகிய இடங்களில் இடுவது சிரமம். ஆனால், இத்தகைய மைக்ரோ காங்கிரீட் சுலபமாக நெகிழ்வு ஏற்படுத்திடவல்லது. இது உலர்ந்த பவுடராக இருக்கும். இது வேலை செய்யும் இடத்தில் திறந்து சரியான அளவு சுத்த தண்ணீருடன் கலந்து உபயோகப்படுத்துவதால் உயர்தர கட்டுமானப் பொருளாக அமைகிறது. ரிப்பேர் செய்யும் இடம் குறுகலாக இருந்தாலும், உபயோகத்தால் தடைபட்ட நெகிழ்வு பிரச்சனைகளை மைக்ரோ காங்கிரீட் நிவர்த்தி செய்கிறது.


மைக்ரோ காங்கிரீட்டின் அனுகூலங்கள்



  1. இது ஒரே பவுடர் ஆகையால், வேலையில் எளிதாகத் தண்ணீருடன் கலந்து கலவை தயாரிக்க முடிகிறது.

  2. இடத்திற்கு ஏற்றாற்போல் இதன் வலிமைத் திறனைத் தேர்வு செய்ய முடியும் (HS2 - 60N/mm' (60 MPa)

  3. ஒரே சீரான தரத்தில் கிடைக்கிறது.

  4. நீராற்றல் (Curing) தேவை இல்லை

  5. இதன் பிணைப்பு வலிமை மிக அதிகம்

  6. இது சுருங்காது. (Non-Shrink)

  7. இது மலிவானது (Economical)

  8. இதை உபயோகிப்பதால் வேஸ்டேஜ் இல்லை.

  9. இடுக்குகளிலும், சிறிய இடங்களிலும் எளிதாக இடலாம்


10.இது இடுவதற்கோ அல்லது ஊற்றுவதற்கோ அல்லது பம்ப் செய்வதற்கோ உகந்தது.


 


எங்கு உபயோகப்படுத்தலாம்?


இந்த மைக்ரோ காங்கிரீட்டை ரிப்பேர் செய்ய காலம், பீம் மற்றும் சிலாப் ஆகிய காங்கிரீட் இடுவதற்கு உபயோகப்படுத்தலாம். மேலும் காலம் ஜாக்கெடிங் வேலைக்கும் உபயோகப்படுத்தலாம்.


மைக்ரோ காங்கிரீட் வார்க்கும் முறை



  1. மேல் பரப்பு தயாரித்தல்


மேல் பரப்பில் உள்ள தூசி, ஆயில் மற்றும் அசுத்தங்களை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்வதற்கு பிரஷ் அல்லது தண்ணீர் ஜெட் உபயோகப்படுத்தலாம். பிறகு மேல்பரப்பை உலர்த்தி துடைத்து விடவேண்டும்.இதற்குப் பின் தேவைக்கு ஏற்ப எஃகு கம்பிகளை கட்டி தயார் செய்ய வேண்டும் இதற்குப் பின் துருபிடிக்காமல் இருக்க தேவையான கோட்டிங்கை கம்பி மேல் அடிக்க வேண்டும்



  1. கலக்குதல்


தேவையான சுத்தமான தண்ணீரை (11 முதல் 13 சதவிகித எடையைப் பொறுத்து) பவுடருடன் சீராகக் கலக்கி சேர்க்க வேண்டும். இயந்திர உதவியுடன் மிக்சரை வைத்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்க வேண்டும். 2 நிமிடம் தாமதித்து மறுபடியும் கலக்க செய்ய வேண்டும் அதன் பயன்பாட்டுக் காலத்தை அதிகமாக்க மேலும் தண்ணீர் சேர்க்கக் கூடாது



  1. இடுதல்                                                                                                                                    ஊற்றுவதற்கு புனல் அல்லது கூம்பு மற்றும் சூட் இவைகளை உபயோகிக்கலாம் இதற்கு அமைவதற்கு வைப்ரரேட்டர் தேவையில்லை. உபயோகப்படுத்தக் கூடாது. தேவைக்கு ஏற்ப சன்ன ஜல்லி 8 எம் எம் -மை விடக் குறைந்த அளவு சேர்க்கலாம்.


டெக்னிகல் டேட்டா:


அடர்த்தி பல்க் (Bulk Density)                                         :  1550 - 1650 Kg/c.m


அடர்த்தி (ஈரம்)                                                               : 2250 - 2350 Kg/c.m


ஜல்லி (தேவைக்கேற்ப)                                               : மணல் மற்றும் 8 mm ஜல்லி


தண்ணீர்                                                                           : 11 to 13% (ஜல்லி இல்லாமல்)


பயன்பாட்டுக் காலம்                                                     : 60 நிமிடம்


அழுத்தத் திறன்                                                               :  60 Mpa


25 Kg bag Yield                                                                   :  14 to 15 Litre


Flexural strength (மோமென்ட் வலிமை)                       : 10 MPa


இழுப்பு வலிமை                                                               : 5 Mpa


முடிவுரை:


இது ரிப்பேர் செய்ய மிக உகந்தது. எவ்விதமான குறுகிய இடத்திலும் நன்றாக வார்க்கக் கூடியது. இது வலிமை மிகுந்தது. இடுவதற்கு மிக எளிதானது. இதன் வலிமையை பரிசோதனை செய்து, தேவைக்கு ஏற்றாற்போல் HS1, HS2 அல்லது HS3 உபயோகப்படுத்தலாம். இதற்கு கியூரிங் தேவையில்லை.