4வது முறையாக மதுரையில் கட்டுமான தொழில் கண்காட்சி
யுனைடெட் பில்டு எக்ஸ்போ நிறுவனம் தொடர்ந்து நான்காவது முறையாக மதுரையில் கட்டுமான தொழில் கண்காட்சியை நடத்த உள்ளார்கள்.இக்கண்காட்சி வரும் பிப்ரவரி மாதம் 14,15 மற்றும் 16 தேதிகளில் இக்கண்காட்சி தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. பல முன்னணி கட்டுமானப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவன அரங்குகள் இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளன. மதுரையின் முன்னணி கட்டுமான நிறுவனங்கள் தங்கள் வீட்டு மனைகள், அடுக்குமாடி வீடுகள் மற்றும் தனி வீடுகளை காட்சிப்படுத்த உள்ளன. புதிய தொழில் நுட்பங்களை காணவும், வீடு கட்டுவோருக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கவும்
இக்கண்காட்சி மிக உதவியாக இருக்கும். இதில் நமது Building & Construction மாத இதழ் அரங்கும் அமைய உள்ளது. அனைவரும் வருக.