ஈரோடு பில்ட் எக்ஸ்போ 2019 கண்காட்சி இன்று காலை 10 மணிக்கு ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பரிமளம் மஹாலில் துவங்கியது. ஈரோடு மாவட்ட பொறியாளர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட பொறியாளர் டிரஸ்ட் இணைந்து 19 -ஆவது ஆண்டாக இந்த கண்காட்சியை வெகு சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.
விழாவிற்கு வந்த அனைவரையும் ஈரோடு மாவட்ட பொறியாளர் சங்க தலைவர் Er. VR பழனியப்பன் அவர்கள் வரவேற்றார். ஈரோடு இஞ்சினியர்ஸ் டிரஸ்ட் தலைவர் Er. குகன் அவர்கள் கண்காட்சி பற்றி விளக்கினார். இன்ஜினியர் நாகராஜன் அவர்கள் விழாவிற்கு தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார்.
கண்காட்சியை ராமகிருஷ்ணா ப்ளூ மெட்டல்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் திரு எஸ் கே யோகானந்தம் அவர்கள் துவக்கி வைத்தார். சிவா ப்ளூ மெட்டல்ஸ் மேலாண் இயக்குனர் திரு இளங்கோ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கண்காட்சி டைரக்டரியை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் வெளியிட, ஆர்.பி.பி. செல்வ சுந்தரம் அவர்கள் பெற்றுக்கொண்டார். லயன்ஸ் கிளப் திரு முத்துசாமி அவர்கள் சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். 130 -க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன் இந்த கண்காட்சி இனிதே துவங்கியுள்ளது.